என்னவள் யாரோ?

என்னவள் யாரோ?

பறப்பது போன்ற எண்ணம்,
வானில் பறக்கும் பறவையைத்
தொடும் உணர்வு,
என் மன வானில்!
வாழ்வில் எதையோ சாதித்த பூரிப்பு,
அவளைக் கண்ட நாள் முதல்!
என் நிலவைக் கண்ட நாள் முதல்!
என் கால் மீது அவள் கால் வைத்து
நெற்றியில் முத்தமிடும் உயரம்,
மையில் தீட்டிய பதுமை
ஆம்!
பெண்மையின் மென்மையில்,
கண்மையின் வன்மையில்,
இளமையின் வளமையில்,
எளிமையின் இனிமையில்,
அவள் யாரோ?
அவளது முகம் மட்டும்
வர மறுக்கிறது.
எனது கனவில்
அவளது நினைவாக!!!

Leave a Reply

Your email address will not be published.